சாதாரணமாக இருந்துவிட முடியாது! வைத்தியர் கடும் எச்சரிக்கை
corona
sri lanka
people
By Shalini
விடுபட்ட நோயாளர்களை மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சேர்க்கும்போது, நாளாந்தம் பதிவான மொத்த தொற்றாளர் எண்ணிக்கையில் சிறிய மாற்றம் ஏற்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இதனை கடந்த காலங்களுடன் ஒப்பிடுவோமானால், நாளாந்த தொற்றாளர்கள் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதே தவிர அதிகரிப்பு ஏற்படவில்லை என்பதை அவதானிக்கலாம்.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் எமக்கு எந்த தடங்களும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தற்போது, நாளொன்றில் 2,300 தொற்றாளர்கள் பதிவாகியுள்ள போதிலும் தொற்று குறைந்துவிட்டது என்று சாதாரணமாக இருந்துவிட முடியும் என்றும் கூறமுடியாது என கடுமையாக எச்சரித்தார்.