CID-யின் விசாரணை வளையத்திற்குள் மற்றுமொரு விசேட வைத்தியர்!
சுகாதார அமைச்சின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்தியர் ஜயருவன் பண்டார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு விசாணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
நேர்காணல் ஒன்றின்போது அவர் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று (31) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா முதலாம் மற்றும் 2ஆவது அலையின் போது சுகாதார அமைச்சில் முக்கிய பொறுப்பு வகித்த விசேட வைத்தியர் ஜயருவன் பண்டார, பின்னர் குறித்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, மூத்த ஊடகவியலாளர் ஒருவருடன், நேர்காணலின் போது அவர் கூறிய பல கருத்துக்கள் தொடர்பிலேயே விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நேர்காணலில், நாட்டில் தற்போதைய கொரோனா நிலைமையை கையாள்வதை வைத்தியர் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகளின் அதிக விலையையும் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா மரணங்கள் குறித்து சமூகஊடகத்தில் கருத்துக்களை பதிவிட்ட அவிசாவளை வைத்தியரும் இதற்கு முன் CID விசாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.