இலங்கையில் கொரோனா சமூகப்பரவலாக மாறியுள்ளதா?
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் கொரோனா வைரஸ் இதுவரை சமூகப்பரவலாகவில்லை என இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது மூன்றாவது கட்ட மிக உயர்ந்த ஆபத்தில் உள்ளது என்றும், சமூகப்பரவல் ஆபத்து நான்காவது கட்டத்தில் இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தொற்றுநோயியல் பிரிவின் தகவல்களின் படி,
நாட்டில் பதிவான பாதிப்புகளின் எண்ணிக்கையால் தொற்றுநோய் தற்போது நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது என்று தெிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த நாட்டில் கொரோனா வைரஸ் சமூகப்பரவலாக்கப்படவில்லை என்பது தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்