தடுப்பூசி விநியோகத்தில் பாகுபாடு! ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு
பொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், 2021 வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போதும், ஆறு மாதங்களுக்கு முன்பு இடம்பெற்ற கொரோனா தொற்று தொடர்பான விவாதத்தின் போதும் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் தேவையான எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை அவசியமான நேரத்தில் கொள்வனவு செய்ய அரசு தவறி விட்டது.
தற்போது கொள்வனவு செய்திருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை சனத்தொகையுடன் ஒப்பிடும்போது போதுமானதாக இல்லை.
தடுப்பூசி விநியோகத்தின் போது அரசாங்கம் தமது ஆதரவாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது என்றார்.