இரு வாரத்தினுள் வர்த்தமானி வெளியாகும் - பெருந்தோட்டத்துறை அமைச்சர் திட்டவட்டம் K.Vanan
srilanka
parliament
dr-ramesh pathirana
By Vasanth
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்கும் திட்டம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வர்த்தமானி அறிவிப்பு மூலம் வெளியிடப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இன்று (09) நாடாளுமன்றில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது பேசிய அவர், ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும்.
பின்னர் இந்த திட்டம் சட்டமாக மாறும்.
இருப்பினும் இறுதி முடிவு எடுக்கப்படும் முன்னர் பெருந்தோட்ட உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் கவலை தொடர்பாகவும் அரசாங்கம் கவனத்தில் எடுக்கும்.
வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும் தொழிலாளர்களுக்கான அதிகரித்த ஊதியத்தை தோட்ட உரிமையாளர்கள் செலுத்த வேண்டியிருக்கும் என்றார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி