தீவிர சிகிச்சைப்பிரிவில் களுபோவில வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர்
doctor
kalubowila
i.c.u
By Sumithiran
கொரோனா தொற்றுக்குள்ளான கொழும்பு – களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லன தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சாதாரண விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் இன்று காலை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவர் ருக்ஷான் பெல்லன, அரச மருத்துவ சம்மேளனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.