நாடக கலைஞர்களுக்கு ஏற்பட்ட நிலை - நிறுத்தப்பட்டது நாடகம்
பொரளை நாமல் மாலினி புஞ்சி தியேட்டரில் நேற்று (16) நடைபெறவிருந்த “சகுந்தலயா” என்ற மேடை நாடகத்தின் ஆடைகள் மற்றும் பொருட்கள் அடங்கிய சிவப்பு நிற சூட்கேஸை நேற்று முன்தினம் (15) பிற்பகல் யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் பிற்பகல் 3.00-4.00 மணிக்கு இடையில் இந்த திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அருகில் உள்ள சிசிடிவி கமராக்கள் மூலம் பொரளை ஃபேர்பீல்ட் பூங்கா ஊடாக வளாகத்தில் இருந்து நபர் ஒருவர் சூட்கேஸை இழுத்துச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொரளை காவல்துறை குழுக்களும் நேற்று பிற்பகல் திரையரங்கிற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்ட நாடகம்
இதன்காரணமாக நேற்று பிற்பகல் நடைபெறவிருந்த சகுந்தலயா மேடை நாடகத்தை காலவரையின்றி ஒத்திவைக்க ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த திருட்டைச் செய்த சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
இந்த பொருட்கள் அல்லது சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் லிட்டில் தியேட்டருக்கு தெரிவிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கோருகின்றனர்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
