ஆடைக் கட்டுப்பாடு - கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாடசாலை ஆசிரியர்களுக்கான தற்போதைய ஆடைக் கட்டுப்பாடு எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
இன்று (04) கொட்டாஞ்சேனையில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆடைக் கட்டுப்பாடு
சில தரப்பினர் கோரிக்கை விடுத்தாலும் ஆண், பெண் ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு மற்றும் மாணவர்களின் சீருடைகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது.
நாட்டின் கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பே இதற்குக் காரணம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பாரம்பரிய சேலையை மட்டும் கடைப்பிடிக்காமல் கடமைக்குச் செல்லும் போது பாடசாலை ஆசிரியர்கள் வசதியாக உடையணிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என முன்மொழிந்ததை அடுத்தே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா
