விடிய விடிய நண்பர்களுடன் மது விருந்து : காலைவேளை போதையுடன் பேருந்து ஓட்டிய நடத்துனர் சிக்கினார்
விருந்தொன்றில் நண்பர்களுடன் இணைந்து பதினொரு போத்தல் மது அருந்திய பின்னர், கண்டியிலிருந்து ஹட்டனுக்கு ஐந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தின் ஓட்டுநரை கம்பளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கண்டி தனியார் பேருந்து நிலையத்தில், ஆறு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுடன் விடியும்வரை வரை நீடித்த ஒரு விருந்திற்குப் பிறகு, அந்த ஓட்டுநர் போதையில் பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.
பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்ற நடத்துனர்
கைது செய்யப்பட்ட ஓட்டுநர், கினிகத்தென, கனல்வத்தையைச் சேர்ந்த 40 வயதுடையவர்.

கம்பளையின் காகதபிட்டிய பகுதியில், கம்பளை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் காலை போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஓட்டுநருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும், அவர் அந்த இடத்திலிருந்து பேருந்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றார்.
அதன்படி, பேருந்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அவர் கடுமையாக போதையில் இருந்தது கண்டறியப்பட்டதாக காவல்துறையினர்ர் தெரிவித்தனர். சந்தேக நபர் ஜூன் 01 அன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |