சாரதியின் தூக்கக் கலக்கம்! விபத்தில் சிக்கிய ஹெண்டயினர்
By Chanakyan
முல்லைத்தீவு மாங்குளம் - மல்லாவி பிரதான வீதியில் ஹெண்டயினர் வாகனமொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த வாகன சாரதி மல்லாவி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு கோதுமை மாவினை ஏற்றிக்கொண்டு வந்த வாகனமே இவ்வாறு விபத்தில் சிக்கியுளள்ளது. சாரதியிச் தூக்க கலக்கமே விபத்திற்கு பிரதான காரணம் என ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டுவருகின்றனர்.


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்