நாளை முதல் புதிய டிஜிட்டல் முறை அறிமுகம் - மக்களுக்கு விசேட அறிவிப்பு
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குத் தேவையான மருத்துவச் சான்றிதழ்களை வழங்குவதற்காகப் புதிய டிஜிட்டல் முறை ஒன்று நாளை (24) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
குறித்த விடயத்தை தேசியப் போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த புதிய முறையின் மூலம், விண்ணப்பதாரர்கள் தங்களது மருத்துவப் பரிசோதனைகளுக்கான சந்திப்பு நேரத்தை (appointments) எத்தகைய தொலைபேசி வலையமைப்பினூடாகவும் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
மருத்துவச் சான்றிதழ்
இந்தச் சந்திப்பு முன்பதிவு சேவையானது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதுடன், திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கீடு செய்வதற்கு விண்ணப்பதாரர்கள் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடவடிகையானது ஓட்டுநர் உரிம விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றிதழ் பெறும் முறையை மேலும் எளிமைப்படுத்துவதுடன், சந்திப்பு முன்பதிவுகளை மிகவும் வசதியானதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |