உக்ரைனில் தொடருந்தில் ரஷ்ய இராணுவத்தின் கொடூர தாக்குதல்: கொத்தளித்த ஜெலன்ஸ்கி
உக்ரைனில் (Ukraine) பயணியர் தொடருந்தின் மீது ரஷ்ய (Russia) இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ட்ரோன் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகின்றது.
ரஷ்ய இராணுவம்
இந்தநிலையில், உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள ஷோஸ்ட்கா தொடருந்து நிலையத்தை குறிவைத்து ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
கீவ் நகருக்கு சென்று கொண்டிருந்த பயணியர் தொடருந்து மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
காட்டுமிராண்டித்தனம்
இதையடுத்து, உடனடியாக அங்கு மீட்புப் படையினரும் மற்றும் வைத்தியர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் இந்த செயலை காட்டுமிராண்டித்தனம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார்.
பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என்பதை அறிந்தும் தாக்குதல் நடத்துவது பயங்கரவாதம் மற்றும் உலகம் இதைப் புறக்கணிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
