அமெரிக்க இராணுவ தளம் மீது ஆளில்லா விமானம் தாக்குதல்
United States of America
Syria
Iraq
By Sumithiran
சிரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்தின்படி, சிரியாவின் கிழக்கு மாகாணமான Deir ez-Zur இல் உள்ள கொனிகோ எரிவாயு வயலில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் இரண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானத் தாக்குதலின் விளைவாக
ஆளில்லா விமானத் தாக்குதலின் விளைவாக, அமெரிக்க இராணுவத் தளத்திலிருந்து புகை மண்டலம் வெளிவந்தது. எனினும், தாக்குதலின் பின்னரான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
காசா பகுதியில் இஸ்ரேலிய ஆட்சியின் இனப்படுகொலைப் போர் தொடங்கியதைத் தொடர்ந்து ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகள் தாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்