இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! இலங்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு
கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை (02) ஏற்பட்ட நிலநடுக்கம் இலங்கையைப் பாதிக்கவில்லை என்று பேரிடர் மேலாண்மை மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், அதன் மையப்புள்ளியிலிருந்து 1,000 கிலோமீற்றர் தொலைவிற்குள் அபாயகரமான சுனாமி அலைகள் உருவாகக்கூடும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையிலேயே பேரிடர் மேலாண்மை மையத்தின் பணிப்பாளர் மேற்படி அறிவித்துள்ளார்.
அபாயகரமான சுனாமி அலைகள்
இருப்பினும், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவின் கடற்கரைகளில் அபாயகரமான சுனாமி அலைகள் உருவாகக்கூடும் என்று ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தோனேசியாவை தாக்கிய நிலநடுக்கத்தில் ஒரு பெண் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு சுலவேசி தீவில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருந்த 70 வயது மூதாட்டி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மீட்புக் குழுக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்