ஈரானை கற்காலத்திற்கு அழைத்து செல்வதாக அறிவித்த ட்ரம்ப்!
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை அடுத்த 2 முதல் 3 வாரங்களில் மேலும் தீவிரப்படுத்த தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
புதன்கிழமை இரவு வெள்ளை மாளிகையில் இருந்து உரையாற்றிய அவர், “அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஈரானை மிகவும் கடுமையாக தாக்கப் போகிறோம்.
அவர்கள் இருக்க வேண்டிய கற்காலத்திற்கே அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்லப் போகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றம்
ஆட்சி மாற்றம் தங்கள் நோக்கம் இல்லை என தெரிவித்துள்ள ட்ரம்ப், அவர்களின் முக்கிய தலைவர்கள் அனைவரும் உயிரிழந்ததால், இயல்பாகவே மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Image Credit: France 24
இந்த நிலையில், இதற்கு முன்பும் ஈரானை கற்கால நிலைக்கு கொண்டு செல்வோம் என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளார்.
மேலும், தனது ட்ரூத் சோசியல் பதிவில், ஈரான் அமெரிக்காவிடம் போர்நிறுத்தம் கோரியுள்ளதாகவும், ஆனால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்ட பின்னரே அதைப் பரிசீலிப்பதாகவும் அதுவரை, ஈரானை முழுமையாக தாக்கி அழித்து வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்