இலங்கையில் 7,000 ரூபாயினால் அதிகரித்த விலை
இலங்கையில் இன்றைய தினம் (02) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று ஒரு பவுண் தங்கத்தின் விலை 7,000 ரூபாயினால் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உள்நாட்டு சந்தையில் நிலவும் கேள்விக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய விலை நிலவரம்
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 403,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,350ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்