அதிரடியாக அதிகரித்த கச்சா எண்ணெய் விலை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றும் போது ஈரான் தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் விரைவில் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ட்ரம்ப்பின் உரையின் மூலம் அந்த நம்பிக்கை நீக்கப்பட்டதே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ட்ரம்பின் உரை தொடங்குவதற்கு முன்னர் ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சாய் எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
மூடப்பட்ட கடல் வழிப்பாதை
உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அது சுமார் 4 வீதத்தினால் அதிகரித்து, தற்போது ஒரு பீப்பாய் 105.38 டொலர்களாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 20 இந்த குறுகிய கடல் வழிப்பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது.
இந்தநிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தக் கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்ததையடுத்து, நிலைமை இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்