கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! வெளியான புதிய சுற்றறிக்கை
பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு 2016 ஏப்ரல் 29 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுடன், இந்தச் சுற்றறிக்கையின் விதிகளும் இனிமேல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உடல் ரீதியான தண்டனை
அதன்படி, எந்தவொரு மாணவரும் தண்டனையாகவோ அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்படக்கூடாது, மேலும் எந்த மட்டத்திலும் எந்தவிதமான உடல்ரீதியான தண்டனையும் அளிக்கப்படக்கூடாது, தவறு செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் ஒழுங்கு நடவடிக்கைகளைக் கையாளும்போது, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கை வலியுறுத்துகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்