ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் உச்சக்கட்ட தாக்குதல் - சற்றுமுன் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் அவர்களிடம் எரிசக்தி நிலையங்களை ஒவ்வொன்றாக தாக்க உள்ளோம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அநேகமாக இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயெ அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஈரான் தலைவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர்.

ஈரானில் மகத்தான வெற்றிகளை அடைந்துள்ளோம். ஈரான் கடற்படை, வான்படை அழிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆயுதப்படைகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஈரான் ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் அவர்களிடம் எரிசக்தி நிலையங்களை ஒவ்வொன்றாக தாக்க உள்ளோம்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக அமெரிக்காக்கு எண்ணெய் தேவையில்லை. அமெரிக்கா தனது ஆற்றல் தேவைகளில் தன்னிறைவு அடைந்துள்ளது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் விரைவில் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு ட்ரம்ப்பின் உரையின் மூலம் தகர்க்கப்பட்டதே இதற்கு காரணமாகும்.
ஜனாதிபதி உரை தொடங்குவதற்கு முன்னர் ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சாய் எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அது சுமார் 4% இனால் அதிகரித்து, தற்போது ஒரு பீப்பாய் 105.38 டொலர்களாக உயர்ந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்