கடும் வறட்சி -கால்நடை வளர்ப்பு கடுமையாக பாதிப்பு
இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியால் கால்நடை வளர்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் கிடைக்காமல், மேய்ச்சல் நிலங்கள் வறண்டு கிடப்பதால் உணவு இன்றி கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன.
எருமைகள் அதிகம் உள்ள
கால்நடை வளர்ப்பு அதிகமாக மேற்கொள்ளப்படும் அனைத்து மாவட்டங்களும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.எருமைகள் அதிகம் உள்ள ஹம்பாந்தோட்டை, அம்பாறை, மொனராகலை, பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ள சிறு குளங்கள் அனைத்தும் வறண்டு போயுள்ளன.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அமைச்சில் கால்நடை அபிவிருத்திப் பிரிவினருடன் இது தொடர்பாக கலந்துரையாடியதுடன், பசுக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கால்நடை அபிவிருத்தி பிரிவுக்கு பணிப்புரை விடுத்தார்.
புல்வெளிகளுக்கு தீ வைக்க வேண்டாம்
வறண்ட மேய்ச்சல் நிலங்களில் தீ விபத்துகளும் பதிவாகி வருகின்றன. இதேவேளை காய்ந்த புல்வெளிகளுக்கு தீ வைக்க வேண்டாம் என அந்தந்த பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்களில் விளம்பரம் ஒன்றை காட்சிப்படுத்துமாறு கால்நடை அபிவிருத்தி பிரிவுக்கு அமைச்சர் அறிவித்தார்.
கடும் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தினசரி பால் உற்பத்தி குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.