யாழில் போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு!
Jaffna
Death
By Pavi
யாழ்ப்பாணத்தில் மலசல கூடத்தில் மயங்கி விழுந்மு கிடந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (28.072026) இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் வீட்டில் இருந்த மலசல கூடத்திற்கு நேற்று சென்ற நிலையில் அதிக நேரமாகியும் வரவில்லை என்ற காரணத்தால் வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது அவர் அங்கே மயங்கி கிடந்துள்ளார்.
போதைக்கு அடிமையான இளைஞன்
இதன் பின்னர் அந்த இளைஞனை வீட்டில் உள்ளவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றவர்களிடம் கூறி உள்ளனர்.
இதனை தொடர்ந்து உயிரிழந்த இளைஞனின் உடல் பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்த விசாரணையின் போது குறித்த இளைஞன் சில காலமாக கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி