தென் மாகாணத்தில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் வியாபாரம்!
இலங்கையில் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் அதிகமாக நடைபெறும் பகுதிகளாக தென் மற்றும் மேல் மாகாணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தென்பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்துள்ளார்.
தென் பகுதியில் இதுவரையில் 1300 கீலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு 258 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலைமை முடிவின்றி தொடர்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வருகைத் தரும் வெளிநாட்டவர்களை குறி வைத்தும் இவ்வாறு போதைப்பொருள்ள வியாபாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதாள குழுச் செயற்பாடுகள்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் பாதாள குழுச் செயற்பாடுகள் அதிகமாக நடைபெறும் பகுதிகளாக தென் மற்றும் மேல் மாகாணங்கள் விளங்குகின்றன.

உனாகூராவே சாந்த- கொஸ்கொட சுஜீ- ரத்கம விதுர -கரந்தெனிய சுந்தா அண்மையில் டுபாய் லொக்கா- தெஹிபாலே மற்றும் அவரின் தம்பி களுமல்லி ஆகியோர் தென்பகுதியில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வருபவர்கள் ஆவர்.
தென் பகுதியில் இதுவரையில் 1300 கீலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு 258 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலைமை முடிவின்றி தொடர்ந்து வருகிறது.
கடல் மார்க்கம்
கடலில் மார்க்கமான போதைப்பொருள் தென் பகுதியில் அதிகம் கடற்றொழிலை மேற்கொள்ளும் துறைமுகங்கள் காணப்படுகிறது.

ஆழ்கடல் கடற்றொழில் படகுகள் மற்றும் சாதாரண படகுகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் போதைப்பொருட்கள், கப்பல்களில் இருந்து கடலில் வீசப்படும் .அவை ஆழ்கடல் கடற்றொழில் படகுகளில் எடுத்து வரப்பட்டு இடையில் டிங்கி படகுளில் கரைக்கு கொண்டு வரப்படுகிறது.
இவற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். மேலும் தங்காலை காவல்துறையினர் இரவு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அதனால் முன்னரை விட தற்போது போதைப்பொருளை கடத்துவது இலகுவான காரியமல்ல.
வெளிநாட்டிலிருந்து செயற்படும் கும்பல்
அண்மையில் தொடர்ச்சியாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பங்களை எடுத்துக் கொண்டால் காவல்துறையினரின் நடவடிக்கையால் குறைந்துள்ளது. காவல்துறையினர் முன்னாயத்தமாக செயற்பட்டிருக்காவிடின் அதிக உயிரிழப்புகளும் படுகாயங்களும் ஏற்பட்டிருக்கும்.

துபாயிலோ அல்லது வேறு எந்த நாட்டில் பதுங்கியிருக்கும் பாதாள உலக குழுவினருக்கு உள்நாட்டில் உதவி செய்பவர்கள் தேவை.
துப்பாக்கிதாரி நிச்சயமாக உள்ளுராகவே இருக்க வேண்டும். மேலும் இலங்கையில் அவர்களின் வேலைகளை செயவதற்கு ஒரு முகவர் தேவை. அந்த வலையமைப்பை ஆராய்ந்து வருகிறோம்.
எமக்கு வலுவான புலனாய்வு துறை இருக்கிறது. அத்தோடு மாவட்ட ரீதியில் குற்றங்கள் விசாரணைப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதனுடாக அவர்களின் செயற்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |