போதை மாத்திரைகளுடன் யாழில் மூவர் கைது! தீவிர விசாரணையில் காவல்துறை
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By pavan
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (16) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 296 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட மூவரையும் மேலதிக விசாரணைக்காக சுன்னாகம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் போதைப்பொருள் விற்பனை முகவர்கள் என தாம் சந்தேகிக்கப்பதாகவும், மூவரிடமும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி