இந்தியா - பாகிஸ்தான் யுத்தத்தில் அமெரிக்காவுக்குக் கிடைத்த முக்கிய உளவுத் தகவல்
இந்தியா - பாகிஸ்தான் போரை கண்டுகொள்ளாமல் இருந்த அமெரிக்கா திடீரென இந்த போர் தொடர்பாக அமெரிக்காவிற்கு ஒரு அதிர்ச்சி அளிக்கும் உளவுத் தகவல் கிடைத்த காரணத்தால்தான் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தப்பட்டு உள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஆலோசனைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதில் அமெரிக்கா நேரடியாக தலையிடவில்லை. இது முழுக்க முழுக்க இரண்டு நாட்டு பேச்சுவார்த்தை மூலம் எடுக்கப்பட்ட முடிவுதான். ஆனாலும் இதில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான திரைமறைவு வேலைகளை அமெரிக்கா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
போர் விவகாரத்தில் அமெரிக்கா
இதன் காரணமாகவே இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றி 2 நாடுகளுக்கு முன்பாக அமெரிக்கா அறிவித்தது.
தொடக்கத்தில் இந்த போர் விவகாரத்தில் அமெரிக்கா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. உதாரணமாக இந்த மோதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
அமெரிக்காவின் திறனுக்கும் அவர்களின் 2 நாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை ஏற்கனவே 40 வருடங்களுக்கு மேல் அவர்கள் மோதி வருகின்றனர். நாங்கள் என்ன செய்ய முடியும்.
இந்தியா பாகிஸ்தான் மோதல் தற்போது விரிவாகி உள்ளது, இந்த நாடுகளை நாம் கட்டுப்படுத்த முடியாது. அடிப்படையில், இந்தியா பாகிஸ்தானுடன் விரோதங்களைக் கொண்டுள்ளது, மேலும் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நாம் செய்யக்கூடியது என்னவென்றால், இரண்டு நாடுகளையும் சிறிது சிறிதாக பதட்டத்தைக் குறைக்க வலியுறுத்துவதுதான், ஆனால் அடிப்படையில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு விஷயத்தில் தலையிட நாங்கள் விரும்பவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூட தெரிவித்து இருந்தார்.
இப்படி இந்தியா பாகிஸ்தான் போரை கண்டுகொள்ளாமல் இருந்த அமெரிக்கா திடீரென இந்த போர் தொடர்பாக அமெரிக்காவிற்கு ஒரு "அதிர்ச்சி அளிக்கும் உளவுத் தகவல்" கிடைத்த காரணத்தால்தான் வேறு வழியில்லாமல் இதில் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுத்ததாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அது என்ன உளவுத் தகவல் என வெளியில் தெரிவிக்காத நிலையில், அதனை ஒரளவுக்கு ஊகிக்கிறார்கள் போரியல் ஆய்வாளர்கள்.
இது தொடர்பில் முழுமையாக அலசி ஆராய்கிறது இன்றைய “உண்மையின் தரிசனம்”நிகழ்ச்சி.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
