மோப்ப நாய்களுடன் களமிறங்கிய சிறிலங்கா காவல்துறை!
வவுனியாவில் போதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகம் என்பவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மோப்ப நாய்களுடன் காவல்துறையினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதற்கமைய வவுனியா, நெளுக்குளம் காவல்துறையினர் மோப்ப நாயின் துணையுடன் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா, நெளுக்குளம் சந்திப் பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வடக்கில் அதிகரித்த போதைப்பொருள்

அண்மைக்காலமாக வடக்கில் போதைப் பொருள் பாவனை மற்றும் பரிமாற்றம் என்பன அதிகரித்துள்ளதுடன், வவுனியாவிலும் போதைப் பாவனை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனை என்பவற்றை கட்டுப்படுத்தும் வகையில் நெளுக்குளம் காவல்துறையினர் மோப்ப நாயின் துணையுடன் வீதியால் சென்ற பேருந்துகள், சொகுசு வாகனங்கள் என்பவற்றை மறித்து சோதனையிட்டதுடன், சந்தேகத்திற்கிடமான இடங்கள் மற்றும் நபர்களையும் சோதனை மேற்கொண்டனர்.




அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்