சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்பட்ட கோடிக்கணக்கில் பெறுமதியான போதைபொருட்கள்!
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களை சுங்கத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று ( 17) இடம்பெற்றுள்ளது.
சீதுவை பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்தே இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
லத்தீன் அமெரிக்காவின் குவாட்டமாலா மாநிலத்தில் இருந்து பொலன்னறுவை, ஜயந்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய விவசாயி ஒருவரின் பெயருக்கு இந்த போதைப் பொருட்கள் அடங்கிய பொதி அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த பொதியில் இருந்து மூன்று கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய ஐஸ் மற்றும் மெதெம்பெட்மைன் ஆகிய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த பொதியினை பெற்றுக்கொள்ள வந்த இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |