முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற பொருள் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை
Colombo
Tamil Nadu Police
Drugs
By Sumithiran
முச்சக்கரவண்டியில் 27 இலட்சம் ரூபா பெறுமதியான 27,000 போதைப்பொருள்களை ஏற்றிச் சென்ற 'பம்பின் குமார' என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (25) ஒருகொடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருகொடவத்தை, வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர்.
கிடைத்த இரகசிய தகவல்
மேல்மாகாண புலனாய்வு தலைமையக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் யுக்திய உடன் இணைந்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கிராண்ட்பாஸ் பகுதியில் இருந்து தான் போதைப்பொருளை கொள்வனவு செய்ததாக அவர் தெரிவித்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்