நாட்டில் நிலவும் கடும் வறட்சி: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
Kegalle
Kilinochchi
Trincomalee
Sri Lankan Peoples
TN Weather
By Laksi
தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களில் 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கேகாலை(kegalle), கிளிநொச்சி(kilinochchi) மற்றும் திருகோணமலை(trincomalee) மாவட்டங்களில் 1,542 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகரித்துள்ள வெப்பநிலை
வறட்சியான காலநிலையால் கேகாலை மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரகாபொல, ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட, கலிகமுவ மற்றும் கேகாலை ஆகிய பிரிவுகளில் 646 குடும்பங்களைச் சேர்ந்த 2,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி