பாதாளத்தில் சிக்கிய டக்ளஸின் பிஸ்ரல் மர்மம்!
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும் ஈபிடிபி தலையுமான டக்ளஸ் தேவானந்தாவின் இடுப்பில் ஒரு காலத்தில் செருகப்பட்டிருந்த லைசன்ஸ் பெற்ற பிஸ்ரல் அதே சீரியல் நம்பருடன் எவ்வாறு போதை மாபிய தலைகளில் ஒருவரான மாகந்துர மதுஷின் பாதாள உலகுக்கு சென்றது என்பதும் இப்போது முக்கிய வினாவாக மாறியுள்ளது.
2000 ஆண்டு ஒக்டோபரில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகர் நிமலராஜன் ஊரடங்கு நேரத்தில் உயர்பாதுகாப்பு வலையப்பகுதியில் வைத்து கொல்லப்பட்ட ஆண்டுக்கு மறுவருடமான 2001 இல் அப்போது சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளராக இருந்த சந்தனந்த டி சில்வாவின் அங்கீகாரத்துடன் இந்த பிஸ்ரல் டக்ளசின் தனிப்பட்ட பாதுகாப்காக சிறிலங்கா இராணுவத்தால் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் என்ன ஆச்சரியம் சிலவருடங்களில் இதே பிஸ்ரஸ் அதே சீரியல் நம்பருடன் பாதாள உலக புள்ளியான மாகந்துரே மதுஷின் கும்பலில் இருந்து வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாதாள இடத்தில் பிடிபட்டது டக்ளஸ் தேவானந்தா நேற்று பிடிபட்டவுடன் அவரது தரப்பில் ஒரு பதற்றம் ஏற்பட்டதும் நிலைமையை நிதானத்துடனும், பொறுமையாகவும் கையாள வேண்டும் என காவலில் இருந்தபடி டக்ளஸ் செய்தியனுப்பிய நிலையில் இந்த விடயம் உட்பட்ட பரபரப்பு விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு ......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |