துமிந்த நாகமுவ உட்பட 06 பேருக்கு விடுதலை
released
duminda nagamuwa
quarantine-center
By Vanan
முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரசார செயலாளரான துமிந்த நாகமுவ தனிமைப்படுத்தலில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கண்டி – பல்லேகலையில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், துமிந்த நாகமுவ உட்பட 06 பேர் இன்று விடுதலையாகியிருக்கின்றனர்.
கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், அண்மையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதேவேளை, துமிந்த நாகமுவ தொடர்ந்த மனு எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி