தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம் : வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட துமிந்த

Duminda Dissanayake Sri Lanka Police Investigation Law and Order
By Sathangani Jul 29, 2025 07:13 AM GMT
Report

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமைத் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை (Duminda Dissanayake) அவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கிற்கு நேரடி மற்றும் சூழ்நிலை ஆதாரங்கள் இல்லாததால், துமிந்த திசாநாயக்கவை விடுவிக்க நீதவான் சதுரிகா டி சில்வா உத்தரவிட்டார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்! சர்வதேசத்திடம் இருந்து வெளிவந்த கோரிக்கை

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்! சர்வதேசத்திடம் இருந்து வெளிவந்த கோரிக்கை

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி

ஹெவ்லொக் நகரில் உள்ள ஆடம்பர வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமை தொடர்பான விசாரணையில், கடந்த மே 23 ஆம் திகதி துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம் : வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட துமிந்த | Duminda Released From Gold Plated T56 Firearm Case

அதனைத் தொடர்ந்து கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.

பின்னர், பிணை மனு பரிசீலிக்கப்பட்டு, ஜூலை 14 ஆம் திகதி நிபந்தனைகளின் பேரில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று குறித்த வழக்கிலிருந்து துமிந்த திசாநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வங்கக்கடலில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : இலங்கைக்கு பாதிப்பா...

வங்கக்கடலில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : இலங்கைக்கு பாதிப்பா...

நல்லூர் கந்தன் ஆலயத்தில் இராணுவ அத்துமீறல்: மக்கள் விசனம்

நல்லூர் கந்தன் ஆலயத்தில் இராணுவ அத்துமீறல்: மக்கள் விசனம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026