அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்கள் பறிமுதல்
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Sri Lankan Peoples
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    அனுமதி பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிசென்ற குற்றத்திற்காக டிப்பர் வாகனத்தையும், அதன் சாரதியையும் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல்துறையினர் டிப்பர் வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போதே அனுமதி பத்திரமின்றி கிரவல் மணல் ஏற்றி சென்றமை தெரியவந்துள்ளது.
இரண்டு டிப்பர் வாகனங்களினதும் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிப்பர் வானத்தினையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அத்தோடு, மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களையும், வாகனத்தையும் நீதிமன்றத்தில் முற்படுத்தபடவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 


 
                                        
                                                                                                                         
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        