விஜயின் தேர்தல் பிரசார மேடையில் ஈழத்தமிழர் விவகாரம்! மோடி தரப்புக்கு கடும் விமர்சனம்
ஈழத்தமிழர்கள் இலங்கையில் இருந்தாலும், உலகில் எந்தமூலையில் இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும் நமது கடமையே என இந்தியாவின் தமிழக வெற்றிக்கழக கட்சி தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை கடற்படையால், இந்திய கடற்றொழிலாளர்கள் தாக்கப்படுவது தொடர்பில் மாநாட்டில் பேசுவது குற்றமா? எனவும் விஜய் இதன்போது கேள்வியெழுப்பினார்.
தமிழ்நாட்டின் - நாகையில் இன்று (20) தனது பிரசாரத்தை மேற்கொண்டு உரையாற்றும் போதே விஜய் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..
ஈழத் தமிழர்களும் முக்கியம்
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கடற்றொழிலாளர்களுடைய உயிர் எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு ஈழத் தமிழர்களுடைய கனவுகளும், வாழ்க்கையும் எமக்கு மிக முக்கியம்.
கடற்றொழிலாளர்கள் படும் துயரம் தொடர்பில் கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் ஒன்றுத் கபடதாரி தி.மு.க கிடையாது.
மற்ற கடற்றொழிலாளர்கள் என்றால் இந்திய கடற்றொழிலாளர்கள் என்றும் தமிழகம் என்றால் தமிழக கடற்றொழிலாளர்கள் என்றும் பேசுவதற்கு நாம் ஒன்றும் பாசிச பா.ஜ.க கிடையாது.
நாகைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே வந்து கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் பேசியுள்ளேன்” என தெரிவித்தார்.
இலங்கை காணாமல் போய்விடும்
எவ்வாறாயினும், கடந்த 2011 ஆம் ஆண்டு நாகையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டு இலங்கை இராணுவம் தொடர்பில் ஆக்ரோஷமாக ஆற்றிய உரையின் காணொளி, இன்றைய மாநாட்டின் பின்னர் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த உரையில், இந்திய கடற்றொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக நெருக்கடி ஏற்படுத்தினால் உலக வரைபடத்தில் இருந்து இலங்கை காணாமல் போய்விடும் எனவும் பொறுமையை சோதிக்க வேண்டாம் எனவும் விஜய் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
