துவாரகா உயிருடன்..! மாவீரர் தினத்தன்று வெளியாகவுள்ள காணொளி: புலனாய்வு அமைப்புக்களின் தகவல்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருப்பதாக காட்டுவதற்கு மோசடி நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
துவாரகா உயிருடன் இருப்பதாக காட்டுவதற்கு, செயற்கை நுண்ணறிவைப்பயன்படுத்தி சிலர் காணொளி வெளியிடத் தயாராகி வருவதாக வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச வலையமைப்பு
குறித்த செய்தியில்,
இந்த காணொளியை மாவீரர் நாளான நவம்பர் 27ஆம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த காணொளியை பயன்படுத்தி நோர்வேயில் உள்ள சர்வதேச புலிகள் வலையமைப்பு வெளிநாடுகளில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்காக நோர்வேயில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறவினர்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் join now! |