சந்திரிக்காவின் மகுடிக்கு ஆடுகின்றார் விக்னேஸ்வரன்! ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டு

Eelam People's Democratic Party Srilanka Freedom Party Chandrika Kumaratunga C. V. Vigneswaran Election
By Kathirpriya Apr 12, 2024 12:57 PM GMT
Report

வடக்கின் முன்னாள் முதல்லர் விக்னேஸ்வரன் சிறீலங்கா சதந்திர கட்சியின் முகவராக செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது என தெரிவித்துள்ள ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் சிறிலங்கா அதிபர் தேர்தல் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பான அவரது தற்போதைய நிலைப்பாடு அதை உறுதி செய்வது போன்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார், அவர் மேலும் கூறுகையில்,

"நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் வேட்பாளரை ஒரு பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கை முன்னெடுத்த விக்னேஸ்வரன் தற்போது சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற வேட்பாளர்கள் தமிழ் மக்களுக்கு என்னென்ன விடயங்களை செயல்படுத்துவீர்கள் என்பதை, சர்வதேச ராஜதந்திரிகள் முன்னிலையில் குறிப்பாக அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளின் ராஜேந்திரன் முன்னிலை எழுத்து மூலம் தருமாறு கூறிருக்கின்றார்.

இணையத்தளக் குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் ரஷ்யா முதலிடம்

இணையத்தளக் குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் ரஷ்யா முதலிடம்

முகவராக மாறியிருக்கிறார்

முன்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் பொது வேட்பாளர் தேவை இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு அரசாங்க செலவில் அவர்களது தயவில் வாழ்கின்றவர் அப்படித்தான் சொல்வார் என்று சம்பந்தரை கிண்டலும் கேலியும் செய்திருந்தார் விக்னேஸ்வரன்.

சந்திரிக்காவின் மகுடிக்கு ஆடுகின்றார் விக்னேஸ்வரன்! ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டு | E P D P Party Speaker Talk About Srilanka Politics

இவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருந்த விக்னேஸ்வரன் அன்று சிறிலங்கா அதிபராக இருந்த சந்திரிக்கா அம்மையார் 2000 ஆம் ஆண்டு கொண்டுவந்த விடயங்கள் நல்ல விடயங்கள் என்றும் அதிலே பல சிறந்த விடயங்கள் இருக்கின்றன என்றும் சொல்லி இருக்கின்றார்.

இதிலிருந்து இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினுடைய குறிப்பாக சந்திரிகா அம்மையாரின் ஒரு முகவராக மாறியிருக்கிறாரா என்ற சந்தேகங்கள் எழுகின்றது.

இதேவேளை சர்வதேசத்தின் பங்களிப்புடன் புலிகளும் அன்றைய அரச ஆட்சியாளர்களும் இடையே 2002 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அதேபோன்று இந்நாட்டில் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அவை நடைமுறையாகாத வரலாறும் உள்ளன.

பிரித்தானியாவில் பணிபுரிய விரும்புவோரிற்கு பேரிடி!

பிரித்தானியாவில் பணிபுரிய விரும்புவோரிற்கு பேரிடி!

அதிபர் வேட்பாளர் 

இதேவேளை ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் வடக்கின் அரியணையில் ஏறிய விக்னேஸ்வரன் ஆளுமை இன்மையால் தனது ஆட்சியில் இருந்து அமைச்சர்கள் செய்த மோசடிகளால் அவரது தலைமையிலான ஆட்சியை கலைப்பதற்காக அவைத் தலைவராலேயே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட வரலாறும் இருக்கின்றது.

சந்திரிக்காவின் மகுடிக்கு ஆடுகின்றார் விக்னேஸ்வரன்! ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டு | E P D P Party Speaker Talk About Srilanka Politics

அதுமட்டுமல்லாது ஆளுநர் சரியில்லை என்று கூறி தமக்கேற்ற ஆளுநரையும் கொண்டுவந்திருந்தார்கள், ஆனால் ஊழலையும் சபைக்காக வந்த பெரு நிதியை மீள அனுப்பியதையும் தவிர வேறொன்றையும் சாதித்திருக்கவில்லை.

பின்னர் கட்சியிலிருந்து வெளியேறி புது கூட்டுக்களை அமைத்து தனது சுயநலங்களை மேற்கொண்டுவருவதும் அனைவரும் அறிந்ததே, இவ்வாறாக உறுதியான அரசியல் நிலைப்பாடில்லாத ஆளுமையற்ற விக்னேஸ்வரன் இப்போது சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து சிறிலங்கா அதிபர் வேட்பாளர் கதையை கூறியிருப்பது மக்களுக்கு மேலும் அழிவுகளையே கொடுக்கும்."எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது  

மூன்று மாதங்களில் மத்திய வங்கி கொள்வனவு செய்த டொலர்கள்

மூன்று மாதங்களில் மத்திய வங்கி கொள்வனவு செய்த டொலர்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024