வெளிநாடொன்றில் இ-விசா தரவு மீறல்: அமெரிக்கா - இங்கிலாந்து பயணிகளுக்கு எச்சரிக்கை
மின்னணு விசா அமைப்பில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க தரவு கசிவு காரணமாக, அமெரிக்க குடிமக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியாகியிருக்கலாம் என்று சோமாலியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
சோமாலிய அரசாங்கத்தின் இ-விசா தளத்தில் "அடையாளம் தெரியாத ஹேக்கர்கள்" ஊடுருவி, குறைந்தது 35,000 பேரின் தரவுகளை திருட வாய்ப்புள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்றை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்ட அமெரிக்க தூதரக அறிக்கையின்படி, இணையத்தில் பரவும் கசிந்த ஆவணங்களில் பெயர்கள், புகைப்படங்கள், பிறந்த திகதிகள், திருமண நிலை, வீட்டு முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் தொடர்புகள் ஆகியவை அடங்கும்” என கூறியுள்ளது.
தரவு மீறல்
மேலும், "இந்த தரவு மீறல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் நீங்கள் கணினியில் உள்ளிடும் எந்தவொரு தனிப்பட்ட தரவையும் இந்த தரவுத்திருட்டு வெளிப்படுத்தக்கூடும்" என்று பிரித்தானியாவும் தமது நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

"சோமாலியாவுக்குப் பயணம் செய்வதற்குத் தேவையான மின்-விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முன் அபாயங்களைக் கவனியுங்கள் எனவும் கூறியுள்ளன.
இந்த மீறல் குறித்து சோமாலிய அதிகாரிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஆனால் அந்நாட்டு அரசாங்கம் அதன் விசா சேவையை evisa.gov.so இலிருந்து etas.gov.so க்கு அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்காமல் மாற்றியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |