பரீட்சை எழுத சென்ற பெண்ணுக்கு பருந்து கொடுத்த ட்விஸ்ட் : வைரலாகும் காணொளி
இந்தியாவில் (India) அரசு தேர்வு பரீட்சை எழுத சென்ற பெண்ணின் ஹால் டிக்கெட்டை பருந்து ஒன்று தூக்கிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளா, காசர்கோடு பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்வம் தொடர்பில் தெரியவருகையில், இந்திய மாநிலமான கேரளா, காசர்கோடு பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் (10) அரசு ஊழியர் துறை தேர்வு நடைபெற்றுள்ளது.
பருந்து செய்த காரியம்
தேர்வுக்கு முன்பாக காலை 7.20மணி அளவில் பெண் ஒருவர் படித்துக் கொண்டிருந்துள்ளார்.
அந்த நேரத்தில் வந்த பருந்து ஒன்று பெண்ணின் ஹால் டிக்கெட்டை தூக்கிச் சென்று பள்ளியின் மேல் தளத்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டுள்ளது.
இதன்போது கீழே இருந்த நபர்கள் கூச்சலிட்ட போதும் பருந்து அசையாமல் ஹால் டிக்கெட்டை பிடித்துக் கொண்டபடி காணப்பட்டுள்ளது.
வைரலாகும் காணொளி
பின்னர், தேர்வு தொடங்குவதற்கு முன்பாக இறுதியில் ஹால்டிக்கெட்டை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து பருந்து பறந்து சென்றுள்ளது.
🦅 Viral from Kerala: An eagle snatched a student’s NEET hall ticket but dropped it just in time and the student still made it to the exam. 📄 pic.twitter.com/tqrlhokJ29
— Times Always (@timesalways1) April 11, 2025
இதையடுத்து, குறித்த பெண் சரியான நேரத்தில் தேர்வு எழுத முடிந்துள்ளது. இந்நிலையில், தற்போது குறித்த பருந்தின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
