சுற்றுலா தொடர்பில் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியர்களுக்கு (UK) சுற்றுலா தொடர்பில் அந்நாட்டு வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த எச்சரிக்கையானது பெர்முடா தீவுக்கு ( Bermuda) சுற்றுலா செல்வோருக்காக விடுக்கப்பட்டுள்ளது.
தீவை சுற்றிப்பார்க்க விரும்புவோர், கார்கள், பைக்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, பேருந்துகள், படகுகள் மற்றும் டெக்சிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
அதாவது, சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதுடன், வளைவுகளும் அதிகம் இருக்கும் என்றும், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்றும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களில் பயணிக்கும்போது விபத்துகள் நடப்பது சகஜம் என்றும், அதனால் பலத்த காயங்களும் மரணங்களும் கூட ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள வெளியுறவு அலுவலகம், ஸ்கூட்டர்களை வாடகைக்கு எடுத்தாலும் கவனமாக ஓட்டுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், பெர்முடாவின் சாலை விதிகள் பிரித்தானிய சாலை விதிகளிலிருந்து மாறுபட்டவை என்றும், ஆகவே, அந்நாட்டு விதிகளுக்கேற்ப நடந்துகொள்வது அவசியம் என்றும் சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
