பட்டினியில் வாடும் காசா குழந்தைகள் : கொடூரத்தின் உச்சத்தில் இஸ்ரேல்
காசா (Gaza) பகுதியில் குறைந்தது 60,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல்நல சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்று காசா சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
காசாவுக்குள் வரும் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து முடக்கி வருகிறது.
மார்ச் 2 முதல், எந்த மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லும் வாகனங்களும் காசாவிற்குள் நுழையவில்லை. 23 லட்சம் மக்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர் மற்றும் எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.
உணவுத் திட்ட அமைப்பு
21 ஊட்டச்சத்து மையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையை சீர்குலைத்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்ட அமைப்பு, மூன்று வாரங்களுக்கும் மேலாக காசாவிற்கு புதிய பொருட்களை கொண்டு வர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் தற்போதுள்ள இருப்புக்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே இருக்கும், இதனால் லட்சக்கணக்கானோர் கடுமையான பசியின் அபாயத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவின் குழந்தைகள்
இதற்கிடையில், காசாவின் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தடுப்பூசிகளும் மறுக்கப்படுகின்றன.
மேலும், இஸ்ரேலின் மெகோரோட் நிறுவனம் காசாவின் 70% நீர் விநியோகத்தை துண்டித்தது. மீண்டும் நீர் வழங்கப்படாவிட்டால் ஒரு பேரழிவு தரும் நீர் நெருக்கடி ஏற்படும் என்று காசா அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கு மத்தியில் இஸ்ரேலின் கொடிய வான்வழித் தாக்குதல்களால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குழந்தைகள் மீது எதிர்மறையான அதீத அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
