இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கையின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் 6.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதையடுத்து இலங்கையின் கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இதேவேளை, நாட்டில் தொடரந்து பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
18 பேர் உயிரிழப்பு
அதன்படி, பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 18 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தபோது மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கந்தகெட்டிய பகுதியில் மூன்று பேர், பதுளை, கந்தபொலவில் ஒருவர், ஹேகொடவில் மூன்று பேர், சொரணாத்தோட்டவில் ஒருவர், தெமோதரவில் ஒருவர், லுனுகலவில் ஒருவர், மடோல்சிமவில் ஆறு பேர் மற்றும் பத்தேவாவில் ஒருவர் என உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |