சீரற்ற காலநிலையினால் வடக்கு - கிழக்கில் தொடரும் பாதிப்புகள்
வவுனியா
வவுனியா நெடுங்கேணியில் இன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
இதனால் வைத்தியசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளப்பாதிப்பால் குறித்த மருத்துவமனையின் சேவைகள் தற்காலிகமாகக் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவசர சேவைகள் மாத்திரம் செயல்பட்டுவருகின்றது.

எனவே ஏனைய சுகாதார சேவைகள் தேவையானவர்கள், அருகிலுள்ள மருத்துவமனைகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த இரு தினங்களாக தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றமையால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
செய்தி - கபில்
மட்டக்களப்பு
தற்போது பெய்துவரும் வடகீழ் பருவப் பெயற்சி மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ் நிலங்களில் பலத்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் அன்றாட செயற்பாடுகளில் சற்று தளம்பல் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதனால் பல கிராமங்களின் உள் வீதிகளும் வெள்ள நீரால் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெரியகல்லாறு ஆற்றுவாய் வெட்டப்பட்டு வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்கோள் விடுத்திருந்தனர்.
ஆதற்கிணங்க மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் உருத்திரன் உதயசிறீதர் தலைமையில் புதன்கிழமை(26.11.2025) நடைபெற்ற அனர்த்த முன்னாயத்த கூட்டத்தில் பெரியகல்லாறு முகத்துவாரம் வெட்டுவதது தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
அதற்கிணங்க மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின்; இரண்டு ஜே.சி.பிஇயந்திரங்கள் மூலம் புதன்கிழமை மாலை பெரியகல்லாறு முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டப்பட்டு வெள்ள நீர் கடலை நோக்கி வழிந்தோடுவாற்கு விடப்பட்டுள்ளது.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அதிகரித்த வெள்ளப்பெருக்கினால், மக்கள் குடியிருப்புக்களில் தேங்கியிருந்த வெள்ளநீர் வேகமாக கடலை நோக்கிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
செய்தி - ருஸாத்
அவசர விடுமுறை
வடக்குமாகாணத்தில் நிலவும் தற்போதைய சூழலை முன்னிட்டு, முஸ்லிம் பாடசாலைகளுக்கு உடனடி அவசர விடுமுறை வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் ஆளுனருக்கு இன்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தனது கடிதத்தில் அவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு,போக்குவரத்து சிக்கல்கள் மேலும் சில பகுதிகளில் உருவாகியுள்ள அமைதியற்ற நிலை என பல காரணங்களை முன்வைத்து, நிலைமை சீராகும் வரை குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆளுனர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்தி - கபில்
காரைதீவு மற்றும் மாவடிப்பள்ளி
தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு மற்றும் மாவடிப்பள்ளி பகுதிகளை இணைக்கும் பிரதான வீதி இன்று காலை முதல் காலவரையின்றி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த வீதியில் நீர்மட்டம் அபாயகரமான அளவுக்கு உயர்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்புக் கருதி இந்த அத்தியாவசிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வீதியின் குறுக்கே நீர் பாய்வதாலும், பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருப்பதாலும், பாதையின் நிலைமை உறுதி அற்றதாக மாறியுள்ளது.
இதனால், வீதியைப் பயன்படுத்தும் மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகாமல் தடுக்கவே இந்த மூடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தி - நூருல் உமர்
முல்லைத்தீவு
இன்று காலை முல்லைத்தீவு நகரில், செலான் வங்கியின் முன்பாக உள்ள RDD வீதியில் ஒரு புளியமரம் சரிந்து விழுந்ததனால் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் RDD பணியாளர்கள், பிரதேச சபை பணியாளர்கள், மின்சார சபை பணியாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவுடன் இணைந்து உடனடியாக விழுந்த மரத்தை அகற்றும் பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SLT கம்பங்கள் சேதம் SLT தொலைபேசி கம்பங்கள் உடைந்து, வீதியைக் கடந்து சாய்ந்து கிடப்பதால்வீதியில் வாகனங்களின் பயணம் அபாயகரமாக காணப்படுகிறது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
SLT குழு விரைவில் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை பாதுகாப்பு காரணங்களா மோட்டார் கார்கள், வான்கள், லாரிகள் போன்ற எந்தவொரு பெரிய வாகனங்களும் இந்தச் வீதியை பயன்படுத்த வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.
செய்தி - தவசீலன்
திருகோணமலை - தோப்பூர்
பெய்துவரும் கன மழை காரணமாக திருகோணமலை - தோப்பூர் உப பிரதேச செயலாளர் பிரிவும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் தோப்பூர் உப பிரதேச செயலப் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் கிராமத்திலுள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்பகுந்துள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு தோப்பூர் பிரதேசத்திலுள்ள கிரான்வெளி, புதுவெளி பகுதிகளில் செய்கைபண்ணப்பட்ட விளை நிலங்கள் நீரில் மூழ்கிக் வெள்ளக் காடாக காட்சி தருகிறது.
செய்தி - புஹாரிஸ்
கவலை வெளியிடும் அதிகாரிகள்
நாட்டில் சமீபத்திய கனமழை காரணமாக வெள்ள நீர் வடிகால் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்தும் சில இடங்களில் அதிகரித்தும் வருகிற நிலையில், பலர் அந்த இடங்களை நேரில் பார்க்க அலையலையாக திரள்வது தொடர்பில் அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மாவடிப்பள்ளி மற்றும் கிட்டங்கி போன்ற பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் முழுமையாக சரிந்து விடாத நிலையில், நதிக்கரைகள், பாலத்தடைகள், ஆறு கரைகள் போன்ற இடங்களுக்கு மக்கள் மிக அருகில் சென்று புகைப்படம் எடுப்பதும், காணொளி பதிவு செய்வதும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள், வெள்ளநீர் வடிந்தோடும் இத்தகைய இடங்களின் அடிப்பகுதியில் ஆழ்ந்த பள்ளங்கள் உருவாகியிருக்கலாம், மணல்வரடு தளர்ந்திருக்கலாம், திடீர் நீரோட்ட மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால் பொதுமக்களுக்கு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி - நூருல் உமர்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த பலத்த மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில மாவட்டத்hதில் அமைந்துள்ள வெல்லாவெளி, பழுகாமம், போரதீவு, களுவாஞ்சிகுடி, பட்டிப்பளை, உள்ளிட் பல பகுதிகளிலும் அமைந்துள்ள சிறிய கிராமியக் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிவதை அவதானிக்க முடிவதோடு பார்க்கும் இடங்கள் அனைத்தும் வெள்ளக்காடாய் காட்சி தருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாவட்டத்தின் பிரதான குளங்களின் நீர்மட்டங்கள் வெகுவாக உயர்ந்துள்ளதுடன், வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ள. அந்த வகையில் வியாழக்கிழமை முற்பகல் 10 மணிவரையில் நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 27.5 அடி, தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 12 அடி, உன்னிச்சைக்குளம் 27.4 அடி, உறுகாமம் குளம் 18.6 அடி, அக்குளத்தில் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
வாகனேரிக்குளம் 16.3 அடி, கட்டுமுறிவு 12 அடி, கித்துள்வெவ 5.7 அடி, வெலிக்காக்கண்டிய 16.6 அடி, வடகுனைக்குளம் 9 அடி, புணாணை அணைக்கட்டு 8.9 அடி மாவடிஓடை அணைக்கட்டு 14 அடி நீர்மட்டமாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வியாழக்கிழைமை காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலத்தில் நவகிரிப்ப பகுதியில் 127 மில்லி மீற்றர், தும்பங்கேணிப் பகுதியில் 67 மில்லி மீற்றர், உன்னிச்சைப் பகுதியில் 160.3 மில்லி மீற்றர், உறுகாமம் பகுதியில் 300 மில்லி மீற்றர், வாகனேரி பகுதியில் 139.5 மில்லி மீற்றர், கட்டுமுறிவு பகுதியில் 96 மில்லி மீற்றர், மட்டக்களப்பு நகரில் 169.3 கல்முனை பகுதியில் 66.1 மில்லி மீற்றர், மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வாநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்துகள் தடைப்பட்ட வீதிகள் இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைக்கும் எழுவாங்கரைக்குமான போக்குவரத்து மார்க்கங்களில் வெள்ள நீர் மூழ்கியுள்ளதனால் அவ்வீதிகளுடனா தரைவழிப் போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளன.
அந்த வகையில் பட்டிருப்பு பாலத்தின் உடனான பிரதான வீதி, மண்முனை பாலத்தின் உடனான பிரதான வீதி, வவுணதீவு பாலத்தின் உடனான போக்குவரத்து வீதி, கிரான் புலிபாஞ்சகல் மதகு உடன போக்குவரத்துக்கள் முற்றதக தடைப்பட்டுள்ன.

மண்டூர் - குருமண்வெளி, மற்றும் அம்பிளாந்துறை – குருக்கள்மடம் ஆகிய இரு நீர்வழிப் படகுச் சேவைகளும், பலத்த காற்று வீசுவதனால் மிகவுமு; அவசர தேவைகனுக்காத மதத்திரம் இடம்பெற்று வருகின்றன இதனிடயே பழுகாமம் - பெரியபோரதீவு, வெல்லாவெளி மண்டூர், கல்முனை சவளக்களை, வெல்லாவெளி – திவுலாணை, ஆகிய வீதிப் போக்குவரத்துக்களும் முற்றாகத் தடைப்பட்டுள்ளன.
இதனிடையே போரதீவுப் பற்றுப் பிரதேச சபை உழவு இயந்திரங்கள் மூலம் பட்டிருப்பு பெரியபோரதீவு பிரதான வீதியில் மக்களை ஏற்றி இறக்கும் செயற்பாடகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமை வரையில் பிரதேச செயலாளர் பிவுகளில 257 குடும்பங்களைச் சேர்ந்த 850 பேர் இடம்பெயர்ந்துள்ளார்கள்.
அவர்களில் 3 இடைத்தங்கல் முகாம்களில் 235 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் 167 வீடுகள் பகுதியளில் சேதடைந்துள்ளதாகவும், மட்டக்களப்பு மவாட்ட அனர்த்த முனாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
செய்தி - ருஸாத்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 2 மணி நேரம் முன்