தானாக திறந்துக்கொண்ட மேல் கொத்மலை நீர்த்தேக்க வான்கதவுகள்! பெரும் பாதிப்புக்குள்ளான மலையக பகுதிகள்
மேல் கொத்மலை நீர்தேக்கப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் இன்று வியாழக்கிழமை (27) அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் மழை மேலும் அதிகரித்தால், மீதமுள்ள வான்கதவுகளும் திறக்கப்படக்கூடும் என்பதால், அணையின் கீழ்ப்பகுதியில் கொத்மலை ஓயாவை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
இதேவேளை, மேல் கொத்மலை அணைக்கு கீழே அமைந்துள்ள காமினி திஸாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான் மட்டத்தை நெருங்கியுள்ளதால், அதன் வான்கதவுகள் தானாகவே திறக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நுகாவெல ஆற்றங்கரை, மாவத்துரை, மகாவலி கங்கை, உலப்பனே, கம்பளை, பெரலிய, வெலியியல், கட்டுகஸ்தோட்டை, பொல்கொல்ல உள்ளிட்ட கொத்மலை ஓயா கீழ்பகுதிகளிலுள்ள குடியிருப்போர் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு, நீர்த்தேக்க பொறுப்புப் பொறியலாளர் ஏ.எம்.ஏ.கே. செனவிரத்ன விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பேருந்து நிலையம்
மேலும், மலையக பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று (27) நுவரெலியா நகரத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா புத்த மந்திர மாவத்தை, நுவரெலியா பேருந்து நிலையம், ஹவாஎலியா வைத்தியசாலை மாவத்தை உள்ளிட்ட பல முக்கியச் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், பொதுமக்கள் அசௌகரியத்துக்குள்ளாகினர்.
இதற்கிடையில், தலவாக்கலை சென்.கிளயார் தோட்டப் பகுதியில் ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அந்தச் வீதியின் போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என வானிலைவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.
செய்தி - திருமாள்
மேலும், நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பல பெரிய பாறைகள் சரிந்து விழும் அபாயம் உருவானதைத் தொடர்ந்து, அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொத்மலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீதியருகில் அபாயகர நிலையில் இருந்த ஒரு பெரிய பாறை பிரதான மார்க்கத்தில் விழுந்தது. இதனுடன், கொத்மலை கெரண்டிஎல்லப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்திலிருந்து பல பெரிய பாறைகள் சரிந்து தோட்டப் பகுதிகளில் விழுந்துள்ளன.
இதில் மேலும் பிரதான வீதிக்குச் சரிந்து வரக்கூடிய அபாயம் நீடிப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைக்காக வீதி மூடப்பட்டதாக காவல்துறையினர்.

விமலசுரேந்திர நீர்த்தேக்க பகுதி
நோர்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்க பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பி மேலதிக நீர் இன்றைய (27) காலை முதல் வான் மேவி பாய்கின்றது
இந்த நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக களனி ஆற்றின் நீர்மட்டம் சற்றளவு உயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதனுடன், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து, நிரம்பி வழியும் நிலையை நெருங்கி வருவதாக பொறியலாளர்கள் கூறியுள்ளனர். மேலும், கெனியன் லக்சபான நவ லக்சபான பொல்பிட்டிய மற்றும் விமலசுரேந்திர நீர்த்தேக்கங்களின் மின் உற்பத்தி கொள்ளளவு அதிகபட்ச மட்டத்தில் செயல்படுத்தப்படுவதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா - இராகல
நுவரெலியா - இராகல மற்றும் கந்தபொல பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ராகல–ஹேனகல பகுதியில் உள்ள இரண்டு தொடர்குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் சுமார் 100ற்கும் குடும்பங்கள் அவசரமாக இடம்பெயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்றும், தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மற்றும் கந்தபொல பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ராகல–ஹேனகல பகுதியில் உள்ள இரண்டு தொடர்குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் சுமார் 100ற்கும் குடும்பங்கள் அவசரமாக இடம்பெயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்றும், தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
செய்தி - திருமாள்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 2 மணி நேரம் முன்