திருகோணமலையில் நிலநடுக்கம்!
Trincomalee
Earthquake
By Kanooshiya
திருகோணமலை கடல் பகுதியில் 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று (18) மாலை சுமார் 4:06 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்க வரைபடங்களிலும் பதிவு
நாட்டில் நிறுவப்பட்ட நான்கு நிலநடுக்க வரைபடங்களாலும் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்க வரைபடங்கள் மகாகனதர, ஹக்மான, பல்லேகெலே மற்றும் புத்தங்கல பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
