மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
Earthquake
By pavan
மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை (19.06.2023) 2.00 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
சேத விவரங்கள்
சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
