உயர்வடைந்த கடலோரம்! நிலநடுக்கத்தால் வெளிநாடொன்றில் ஏற்பட்டுள்ள பேரழிவு
பிலிப்பைன்ஸில் இந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கடலின் அடிப்பகுதி சுமார் 2 மீற்றர் வரை மேல்நோக்கி உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
"கடலோர உயர்வு" (coastal uplift) என்று அழைக்கப்படும் இந்த அரிய புவியியல் நிகழ்வினால், கடலுக்குள் மூழ்கியிருந்த பவளப்பாறைகள் மற்றும் கடற்புல் படுகைகள் வெளியே தெரிவதுடன், பெருமளவிலான கடல்வாழ் உயிரினங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள புகைப்படங்களில், கடல் மட்டத்திற்கு மேல் வெளிப்பட்டுக்கிடக்கும் பவளப்பாறைகளின் மேல் இறந்த மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் இறந்த கிடப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
வியத்தகு மாற்றம்
நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த வியத்தகு மாற்றம் அந்நாட்டு மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதுடன் சுமார் 61 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |