நிலநடுக்கங்கள் தொடர்பில் சிரேஷ்ட புத்திஜீவிகள் விடுத்துள்ள எச்சரிக்கை - கவனம் எடுக்காத அதிகாரிகள்
srilanka
caution
earth quake
By Sumithiran
இலங்கைக்கு அருகிலுள்ள இந்திய-அவுஸ்ரேலிய பீடபூமியில் நிலநடுக்கம் ஏற்படும் என்று நாட்டின் சிரேஷ்ட புவியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன, இலங்கைக்குள் மட்டுமன்றி இலங்கைக்கு அருகாமையிலும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
இலங்கையில் நிலநடுக்கங்கள் பற்றிய தகவல்களைப் பெற நான்கு கருவிகள் மட்டுமே உள்ளன என்றும் இது அறுபத்தையாயிரம் சதுர கிலோமீட்டர்களுக்கு போதுமானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை அது தொடர்பில் சரியான கவனம் செலுத்தப்படவில்லை என அவர் கவலை தெரிவித்தார்.