உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது சுய பாதுகாப்பை மட்டுமே முன்னெடுத்த மைத்திரியும் பாதுகாப்பு தரப்பினரும்!
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டிய தகவல்கள் கிடைக்கப் பெற்ற போது பாதுகாப்பு தரப்பினரும் மைத்திரியும் தங்களது பாதுகாப்பினை மட்டும் உறுதி செய்து கொண்டனர் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த கட்டுவாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தாக்குதல் நடைபெற்ற போது மைத்திரிபால சிறிசேனவும், பாதுகாப்பு தரப்பினரும் தங்களது பாதுகாப்பினை மட்டும் கருதிற் கொண்டு செயற்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் அரச தலைவரும், பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து தங்களுக்கு இடையே மட்டும் கடிதங்களை பரிமாறிக் கொண்டனர் என தெரிவித்துள்ளார்.
இந்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமென அரச தலைவர் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆணைக்குழுவிற்காக 600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாத காரணத்தினால் இந்தப் பணம் விரயமாகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
தம்மீது அரசியல் முத்திரைகளை குத்துவது நியாயமற்றது எனவும், இந்தப் போராட்டத்தில் மரித்துப் போனாலும் உண்மையை வெளிக்கொணர போராடுவதாகத் தெரிவித்துள்ளார்.