அசாத் மௌலானா தொடர்பில் டக்ளஸ் வெளியிட்ட தகவல்!
ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர். பத்மநாபா இந்தியாவில் சுட்டு கொலை செய்யப்பட்ட போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய விபரங்களை வெளியிட்ட அசாத் மௌலானாவின் தந்தையும் உயிரிழந்ததாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஒருவரின் மகன் என்ற ரீதியில், அசாத் மௌலானாவிற்கு மரமுந்திரை கூட்டுத்தாபனத்தில் வேலை பெற்றுக்கொடுத்திருப்பேன் என குறிப்பிட்ட அவர் அது தொடர்பில் தனக்கு நினைவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அசாத் மௌலானவை பிள்ளையானுக்கு அறிமுகப்படுத்தினேனா அல்லது பிள்ளையான் எனக்கு அறிமுகப்படுத்தினாரா என்பது விசாரணையில் தெரியவரும். அசாத் மௌலானாவை பிள்ளையான் தான் எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.
வழமை போல எங்கள் மீது சேறு பூசுகின்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ் அரசியல் தரப்பில் எங்கள் மேல் இருக்கக்கூடிய அரசியல் பயம் காரணமாக சொல்லப்படுகின்ற விடயங்கள் இவை” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |