உயிர்த்தஞாயிறு தாக்குதல் சர்ச்சை : மைத்திரியிடம் செல்லவுள்ள குற்ற புலனாய்வுப் பிரிவு
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற உள்ளதாக காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை (25) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இது தொடர்பான வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரியின் கருத்தால் வெடித்தது சர்ச்சை
உயிர்த்தஞாயிறு தாக்குதலை யார் நடத்தியது என்பது தனக்கு தெரியுமென முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலை நடத்தியது யாரென அவருக்கு தெரியுமென கூறிய நிலையில் அவரை கைது செய்யுமாறும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கத்தோலிக்க சமுகத்தினர் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
விசாரணை நடத்துமாறு
இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்துமாறு பொதுபாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், காவல்துறை மா அதிபருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
கோயிலில் மதம் பிடித்து வெறியாட்டம் ஆடிய யானை..! எதிரெதிரே மோதிக்கொள்ளும் யானைகளின் பதைபதைக்கும் காட்சிகள்
இந்த நிலையிலேயே நாளைய தினம் மைத்திரியிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |