ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்தேன் : பெரும் சர்ச்சையை கிளப்பிய மைத்திரியின் கருத்து
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தமக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே நேற்று (22) கருத்து வெளியிட்டதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று (23) தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தொடர்பில் பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இரகசிய சாட்சியம்
தொடர்ந்தும் அவர் கூறியவை, “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மூன்று வாரங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நான் நேற்று அந்த அறிக்கையை வெளியிட்டேன்.
நீதிமன்றத்திலிருந்து முன்னிலையாகுமாறு எனக்கு உத்தரவு கிடைத்தால், இரகசிய சாட்சியத்தை வழங்க எதிர்பார்த்துள்ளேன்.
நேர்மையான அறிக்கை
அது வேறு எந்த காரணத்திற்காகவும் அல்ல, நீதிமன்றத்தில் வெளிப்படையாக சாட்சியம் அளித்தால், எனது வாழ்க்கையையும், பிள்ளைகளையும் குடும்பத்தையும் கூட அழித்துவிடலாம் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும்.
எனவே, இது எந்த அரசியல் சித்தாந்தமோ அல்லது சில அரசியல் பிரச்சனைகள் உள்ளவர்களோ அல்ல. நான் மிகவும் நேர்மையான அறிக்கையை வெளியிடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |